English | தமிழ்
Home  
 
 
Children Homes  
 
 
Forthcoming Events  
Contact Us  
 
   
     
  ACHC – Children Homes

 
போர்ச் சூழ்நிலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பெற்றோர்களை இழந்தும், பாதிக்கப்பட்டுமுள்ள பிள்ளைகளின் நலன்கருதி அகில இலங்கை இந்து மாமன்றம் இரத்மலானையில் ஓர் இலவச விடுதியை ஆரம்பித்து நடத்தி வருவதை உங்களில் பலர் அறிவீர்கள்.

1998ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆண் பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்விடுதி பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது சிறப்புக்குரிய விஷயம்.

தொடர்ந்து 2002ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெண் பிள்ளைகளுக்காக “சக்தி இல்லம்” என்ற பெயரில் இன்னொரு விடுதியும் ஆரம்பிக்கப்பட்டது.

மாமன்றத்தின் பராமரிப்பில் இயங்கிவரும் மேற்படி இரு விடுதிகளிலும் 150க்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி பயில்வதற்கான வசதிகளுடன், மேலதிகமாக தனிப்பட்ட வகையில் கற்பதற்காக பிரத்தியேக வகுப்புகளையும் மாமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

விடுதியில் மாதந்தோறும், ஒரு விடுமுறை நாளில் அந்த மாதத்தில் பிறந்த பிள்ளைகளது பிறந்த தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விடுதியில் வதியும் பிள்ளைகளுக்கு நீங்கள் அனைவரும் தாராளமாக உதவலாம். பிள்ளைகளுக்கு தினந்தோறும் போசனம் வழங்குவதற்காக உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இதற்கான நன்கொடை விபரம் பின்வருமாறு அமைகிறது:

காலைப் போசனம் :15,000/- ரூபா 17,500/- ரூபா (விசேடம்)
மதிய போசனம் : 20,000/- ரூபா   25,000/- ரூபா (விசேடம்)
இரவுப் போசனம் : 20,000/- ரூபா  25,000/- ரூபா (விசேடம்)


போசனத்திற்கான நன்கொடை அல்லது வேறு வகையில் உதவ விரும்புபவர்கள் மாணவர் விடுதி மேற்பார்வையாளருடன் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி இல : 011 - 2625588)

அல்லது


அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி இல : 011-2434990,
தொலைநகல் இல : 011-2344720
 
  Copyrights All Ceylon Hindu Congress 2017.   Powered By: