சிவத்தொண்டர் அணி

மாமன்றம் சிவதொண்டர் அணியை ஆரம்பித்து இதனை பல இடங்களிலும் இயங்க வைக்க முயற்சிகள் செய்து கொண்டுவருகிறது. இதற்கு எமது மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் போதாது என்றே கூறவேண்டும்.

சிவதொண்டர் அணிப்பயிற்சிக் கருத்தரங்குகள் நடாத்தி வருகிறோம். இளைஞர்களுக்கு சிவதொண்டர் சால்வையும், யுவதிகளுக்கு சிவதொண்டர் கழுத்துப்பட்டிகளும் கொடுத்து வருகிறோம். திருக்கேதீஸ்வரத்தில் சிவத்தொண்டர் அணி இயங்கும் மகிமையைப் பார்க்கலாம். சிவத்தொண்டர் அணிகளை நிறுவி இயக்க பாடசாலைகளும், சகல அங்கத்துவ சங்கங்களும், ஆலயக்குழுக்களும் முன்வரவேண்டும். பாடசாலை ரீதியாக இவ் ஆண்டு சிவதொண்டர் அணிகளை அமைப்பதில் வெற்றியுடன் செயல்படுகின்றோம்.

சைவவித்தகர் பயிற்சி

இதேபோல், சைவவித்தகர் பயிற்சியை எமது யாழ்.பணிமனையில் இருக்கும் இந்து ஆராய்ச்சி நிலையத்தில் ஆரம்பித்தோம். இந்த பயிற்சியைப்பெற்றவர்களுக்கு இந்து கலாசார திணைக்களத்தின் அத்தாட்சியுடன் சான்றிதழ்கள் வழங்கியுள்ளோம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து நடாத்துவது முக்கியமானதொன்றெனினும், இதில் சேர எமது இளம் தலைமுறையினர் தயங்குவது வருந்தத்தக்கது.