Hostel
அமரர் கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்களின் கருத்து வித்தாக 1998 இல் ஆரம்பிக்கப்பட்ட விடுதி மாமன்றத்தின் ஓர் முக்கிய தொண்டாக இன்றும் தொடர்கின்றது. நாளும் பொழுதும் கண்ணும் கருத்துமாக இவ் விடுதிப் பிள்ளைகளின் தாயாகவே பேணிப் பராமரித்து வளர்த்துவரும் பெருமை, விடுதிகள் குழுத் தலைவர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை அவர்களையும் விடுதிக் குழுச் செயலாளரான திருமதி முருகானந்தம் அவர்களையும் சாரும் மாமன்றத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமைதாங்கி, இலங்கையில் மட்டுமல்ல பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா நாடுகளிலும் இயங்கும் மனிதநேய நிதியம் தரும் நிதி உதவியையும் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (அவுஸ்திரேலியா – சிட்னி) மற்றும் கொடையாளிகளாகிய நல்ல உள்ளங்கள் தரும் பலதரப்பட்ட உதவிகளையும் நன்றியுடன் குறிப்பிடப்படவேண்டும்.
வன்னிப் போரினால் பாதிக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புனருத்தாரண முகாம்களில் இருந்த 273 பிள்ளைகளை இங்கு கொண்டுவந்து அவர்களுக்கு கல்வி கற்க ஒழுங்கு செய்து இன்று சுதந்திரப் பறவைகளாக சமூகத்துடன் இணைய வழிவகுத்தது இவ்விடுதி செய்த பணியின் முக்கியமான வரலாறு.
இவ் விடுதியில் வாழ்ந்து கல்விகற்ற இளைஞர்கள் பலர் இன்று நல்ல நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்கள்.
இவ்விடுதியினை நடாத்த ஒத்துழைப்பு வழங்கும் கல்லூரி அதிபர் மற்றும் விடுதிக்குழுச் செயலாளராக இயங்கும் திருமதி. ச. முருகானந்தம் மற்றும் ஏனைய ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நன்றி கூறுவதுடன், கண்ணும் கருத்துமாக விடுதிகள் பராமரிப்பில் அயராது உழைக்கும் விடுதிக் குழுத் தலைவியும்;, மாமன்ற கௌரவ பொருளாளருமாகிய திருமதி. அ. கயிலாசபிள்ளை அவர்களையும், இவ்விடுதிக்கு தாராளமாக உதவும் பல கொடை வள்ளல்களையும், குறிப்பாக ஞாயிறுதோறும் மதிய உணவு தரும் தெகிவளை விஷ்ணு கோவில் அறங்காவலர்களையும், நிதி உதவிவரும் மனிதநேய நிதியத்தினையும் மற்றும் பெருமளவில் உதவும் பலரையும் மாமன்றத்தின் சார்பில் மனமுவந்து பாராட்டி நன்றி கூறிவைப்பது எமது கடமையாகும்.

ஒவ்வொரு போயா தினத்தன்றும் மதிய போசனமும், மாதாந்தம் இரு நாட்கள் இரவு போசனமும் வழங்கும் சாயிசமித்தி, ஒவ்வொரு அமாவாசை தினமும் மதியபோசனம் வழங்கும் முத்துகிருஷ்ண சுவாமி, வருடாந்தம் நிதியுதவி தரும் இந்து வித்தியாவிருத்திச் சங்கம், பல வழிகளில் நிதியுதவி வழங்கிவரும் மனிதநேயர் திரு. வி. கயிலாசபிள்ளை குடும்பத்தினர் ஆகியோருக்கு எமது நன்றிகள். மாணவர் விடுதியில் இப்போது ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளுமாக மொத்தம் 109 பேர் இருக்கிறார்கள். முதியோர்கள் விடுதியில் முதியவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்.
விடுதியில் பராமரிக்கப்படும் பிள்ளைகளின் பிறந்த தின நிகழ்வை ஒவ்வொரு மாதமும் கொண்டாட ஒழுங்கு
செய்திருக்கின்றோம். இது அவர்களின் உள வலிமையை மேம்படுத்தும் என்பதற்காக விடுதிக் குழு தலைவர் திருமதி. அ. கயிலாசபிள்ளை அவர்களினால் முன்னின்று செயற்படுத்தப்படுகின்றது.

மாணவர் விடுதிக்கு உதவுங்கள்
அகில இலங்கை இந்து மாமன்றம் சக்தி இல்லத்தில் நடத்தும் இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர் விடுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு உணவு வழங்க விரும்பும் அன்பர்கள் நாளாந்த அடிப்படையில் பின்வருமாறு நன்கொடைகளைத்தந்து உதவலாம்.காலை உணவு ரூ. 20,000/-
மதிய உணவு ரூ. 30,000/-
இரவு உணவு ரூ. 30,000/-
இன்றைய காலகட்டத்தில் பல வயோதிபர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது அப்படியான தேவையை நாடும் ஒரு வயோதிபருக்கு அல்லது பிள்ளைக்கு மாதாந்தம் ரூ. 30,000/- வீதம் நிதியுதவி செய்வது பெரும் புண்ணியம். மேலும் சிலருக்கு மருத்துவ உதவி அவசியம் தேவை. காலத்துக் காலம் விண்ணப்பதாரிகளின் தேவையை ஆராய்ந்து அவசிய தேவை இருப்பின் மாமன்றம் முடியுமானவரை உதவி செய்து வருகின்றது.

விடுதிப் பணிகளுக்கு உதவுபவர்கள் கீழே தரபட்டிருக்கும் விடுதிக் கணக்கிற்கும் ஏனைய பணிகளுக்கு
பொதுக்கணக்கிற்கும் பணம் அனுப்பலாம்.
Bank: Union Bank of Colombo PLC
Branch: Colombo
Account No. 80101000001330 (General Account) or 80101000001349 (Hostel account)
Swift Code: UBCLLKLC