News And Events

01. வெள்ள நிவாரணம் – 22.12.2014

கடந்த டிசம்பர் 2014இல் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வேண்டிய அத்தியவசியப் பொருட்களை எமது அங்கத்துவ சங்கமான “மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை” ஊடாக உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து நிவாரணங்கள் பெறப்பட்டு வெள்ள அகதிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

02. சிறைச்சாலை கைதிகள் – 24.12.2014

வெள்ள அனர்த்தத்தால் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து புதிய மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 36 தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாற்று உடையின்றி அவதிப்படுவதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்களுடாக எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு சாரம், துவாய், சேட், சவர்க்காரம், பற்பசை, தூரிகை என்பன உடனடியாக இந்து மாமன்றத்தால் வழங்கப்பட்டன.

03. நீத்தார் நினைவூ தினம்

இந்து மாமன்றத்தில் பொறுப்புக்களையேற்று வழிநடத்திய பெருந்தகைகள் இன்று எம்முடன் இல்லை. இருந்தாலும் அவர்களின் புனித ஆத்மாக்கள் மாமன்றத்தின் பணிகளுக்கு என்றும் நல்லாசிகள் தந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையூடன் நாம் பணியாற்றிக்கொண்டிருக்கின்றௌம்.

இந்தவகையில் அம்மக்களை நினைவூ கூர்ந்து ஆண்டுதோறும் ஆடிஅமாவாசைத் தினத்தன்று அவர்களின் பின்னுரித்தாளர்களின் பங்குபற்றுதலுடன் நீத்தார் நினைவூநாளை கீரிமலையில் அனுஷ்டிக்க இந்து மாமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிகழ்வூ எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

04. பஞ்சாங்கங்களின் முரண்பாடுகள்

யாழ் மாவட்டத்தில் இருந்து பிரசுரிக்கப்படும் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களில் இந்துக்களின் சில விரத நாட்கள்ஃவிசேட தினங்கள் என்பவற்றில் முரண்பாடு தோன்றுகின்றது. இதனை நிவர்த்தி செய்யூமாறு காலத்திற்குக் காலம் பொதுமக்களிடமிருந்து எமக்கு வேண்டுதல்கள் வருகின்றன. எனவே இதனை நிவர்த்தி செய்யூமுகமாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் எமது இந்துசமய ஆலோசணை சபையைக்கூட்டி இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் பஞ்சாங்கங்களின் கணிப்பாளர்களையூம் சமூகளிக்கச்செய்து பஞ்சாங்கங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தவிர்க்க இந்து மாமன்றம் நடவடிக்கை எடுக்கவூள்ளது.

05. சமயப் பெரியார்களுக்கு நினைவூமுத்திரை வெளியிடல்

எமது சமூகத்தில் வாழ்ந்து அளப்பரிய சமயஇ சமூகசேவைகளையாற்றி அமரத்துவமடைந்த பெரியார்களான
01. இந்துபோர் எஸ். இராஜரட்ணம்
02. சைவப்பெரியார் இ. நமசிவாயம்
03. சிவஸ்ரீ குமாரசுவாமிக் குருக்கள்

ஆகியோர் ஆற்றிய தொண்டினையூம், சேவைகளையூம் கௌரவிக்குமுகமாக நினைவூ முத்திரைகள் வெளியிடல் வேண்டுமென கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் காலத்திற்குக்காலம் வேண்டுகோள்விடுத்து வருகின்றௌம்இ எனினும் தபால் திணைக்களம் இதுவரை உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை. எனினும் 2015 ஜனவரி மாதமும் இவ்வேண்டுகோளை கௌரவ தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளோம். இந்நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அப்பெரியார்களின் நினைவாக முத்திரை வெளியிட இந்து மாமன்றம் முயற்சிக்கும்.

06. மாணவர்களுக்கு கணனிவழங்குதல்

பிரித்தானியாவிலுள்ள திரு. சிவா ரமேஷ் என்ற நலன்விரும்பியின் ஒழுங்கில் திருவாளர்கள் டீ.பு குறூப் என்ற நிறுவனத்தின் அனுசரணையூடன் கடந்தகாலங்களில் எமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 143 மேசைக்கணனிகள் மற்றும் 83 மடிக்கணனிகள் என்பன தேவையான உதிரிப்பாகங்கள் மாமன்றத்தால் கொள்வனவூ செய்யப்பட்டுஇ தரவேற்றிய பின்னர் வறுமைக்கோட்டிற்குக்கீழுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இந்துசமய அமைப்புக்கள்இ பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன.

இவ் அன்பர் மூலம் 2014 டிசம்பர் மாதத்தில் மேலும் 59 மடிக்கணனிகள் கிடைக்கப்பெற்றன. இவையூம் வறுமைக்கோட்டின் கீழுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

07. இந்து மக்களுக்கோர் கையேடு

இந்து மாமன்றத்தின் வெளியீடான “இந்து மக்களுக்கோர் கையேடு” என்ற நூல் இந்து மக்களிடையே மிகவூம் பிரபல்யம்மிக்கதாக விளங்குகிறது. விவேகானந்தசபை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்திற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல் அந்தியேட்டிக்கிரிகைகளில் விநியோகிக்கப்படுவதற்காக சிலரால் தொகையாகக் கொள்வனவூ செய்யப்படுகிறது.

வெளிநாடுகளிலும் பிரபல்யமான இந்நூலை திருமதி. திலகாவிஜயரத்தினம் அவர்களின் உதவியூடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்யவூள்ளோம் இதனை விரைவில் வெளியிட இந்து மாமன்றம் நடவடிக்கை எடுக்கின்றது.

08. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 59வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பச் சென்று மீள் குடியேற வழிவகுக்கப்படாததால் பல கஸ்டங்களுக்கு மத்தியில்-குறிப்பாக உலர் உணவூப் பொருட்கள் வழங்கப்படாத நிலையில்-நலன்புரி நிலையங்களில் அகதிகளாக பல இன்னல்களை எதிர்நோக்குவதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வடமாகாணத்தில்இ வீமன் காமம்இ கட்டுவன் குரும்பசட்டி வறுத்தலைவிளான்இ வசாவிழான் காங்கேசன்துறைஇ தென்மயிலைஇ மயிலிட்டிஇ தையிட்டி மயிலிட்டித்துறைஇ பலாலி ஆகிய கிராமசேவகர் பிரிவூகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் 38 நலன்புரி நிலையங்களில் இன்னும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதேபோல் கிழக்கு மாகாணத்தில் கஞ்சிக்குடிச்சாறுஇ தங்கவேலாயூதபுரம்இ சாகாமம்இ சம்பூர்இ பட்டித்திடல் தோப்பூர்இ கிளிவெட்டிஇ மணல் சேனை போன்ற இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் எவ்வித வசதிகளுமின்றி அகதிகளாக அல்லல்படுகின்றனர். இவர்கள்யாவரையூம் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்தை மீண்டும் வலியூறுத்திக் கேட்டுக் கொள்ளுகின்றௌம். அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தை அரசியல் இலாபங்களுக்கப்பால் மனிதநேயத்துடன் அணுகி அவர்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த சம்பந்தப்பட்ட அனைவரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டிக் கொள்கின்றது.